Wednesday, 10 June 2020

நோய் எதிர்ப்பு சக்தி

*(1) நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் கொரானா வைரஸ் என்ன அதை மீறிய வைரஸ் உம் நம்மை ஒன்றும் செய்ய இயலாது.* 

*(2) நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்னவெல்லாம் சாப்பிடலாம் என பெரிய லிஸ்ட் போட்டு யோசிக்க வேண்டிய அவசியமேயில்லை.*

*(3) பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கை கீரை கட்டு அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால் நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.* 

*(4)  முருங்கையில் வைட்டமின் C ஆனது ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட 7மடங்கு அதிகமாக உள்ளது.*

*(5)  முருங்கையில் வைட்டமின் A ஆனது 
கேரட் இல் உள்ளதை விட 4மடங்கு அதிகமாக உள்ளது.*

*(6)  முருங்கையில் வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50மடங்கு அதிகமாக உள்ளது.*

*(7)  முருங்கையில் வைட்டமின் B3 ஆனது வேர்க்கடலை யில்  உள்ளதை விட 50மடங்கு அதிகமாக உள்ளது.*

*(8)  முருங்கையில் கால்சியம் சத்து  பாலில் உள்ளதை விட 4மடங்கு அதிகமாக உள்ளது.*

*(9)  முருங்கையில் புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதை விட 2மடங்கு அதிகமாக உள்ளது.*

*(10)  முருங்கையில் மெக்னேஷியம் சத்து முட்டையில் உள்ளதை விட 36மடங்கு அதிகமாக உள்ளது.*

*(11)  முருங்கையில் இரும்பு சத்து மற்ற கீரைகளில் உள்ளதை விட 25மடங்கு அதிகமாக உள்ளது.*

*(12)  முருங்கையில் பொட்டாசியம் சத்து  வாழைப்பழத்தில் உள்ளதை விட 3மடங்கு அதிகமாக உள்ளது.*

*இவ்வளவு சத்துக்களையும் விட்டமின்களையும்  உள்ளடக்கிய முருங்கைக்காயையும் கீரையையும் நாம் கண்டுகொள்வதே இல்லை.* 

*முருங்கை உண்ட கிழவன் கூட வெறும் கையோடுதான் நடப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப முருங்கையை உண்டு என்றும் இளமையுடன் வாழ்வோம்...🙏👍*

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்!


1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. 
13. அவ்வப்போது பரிசுகள் அளி. 
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே. 
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே! 
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு. 
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
31. வாழ்வை கண்டு களி!
32. ரசனையோடு வாழ்!
33. வாழ்க்கை வாழ்வதற்கே!

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ 

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.

பிடிச்சிருந்தா, நல்ல விஷயத்த நாலு பேருக்கு ஷேர் பண்ணுங்க..

Tuesday, 2 June 2020

இயற்கை மருத்துவம்

1.உடம்பு சூடு ஆகாமல் பாத்துக்கணும்.வாரத்தில் ஒரு நாளாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். 

2. காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் மோரில் சிட்டிகை பெருங்காயம்,உப்பு சேர்த்து குடிக்கலாம். 

3 . இரவில் படுக்கும் போது தொப்புளில் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் விட்டு படுக்க வேண்டும்.

4. நீர்ச்சத்துள்ள காய்கறிகளை கூட்டு செய்து சாப்பிட வேண்டும் மசாலா புளி காரம் சேர்க்கக்கூடாது.

5. காய்கறிகள், பழச்சாறுகள் சாப்பிட வேண்டும். டீ ,காபி பதிலாக சீரகம் அல்லது தனியா போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் சிறிது வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

6 .அரைமணி நேரம் நடைபயிற்சி, உடற்பயிற்சி, தோப்புகரணம் ,சூரிய நமஸ்காரம் போன்றவற்றில் முடிந்ததை செய்யலாம். 

7. இரவு உறக்கம் 6 மணிநேரம் முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும். 
மதிய உறக்கம் வேண்டாம். 

8. தண்ணீர் ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை 2 டம்ளர் அருந்த வேண்டும். 

9. 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஒரிடத்தில் அமர்ந்து மூச்சு கவனியுங்கள். 

10.தினமும் ஆன்மீகம், அறிவியல், விஞ்ஞானம், இயற்கை, மருத்துவம் ,ஊக்குவிப்பு போன்ற பல புத்தகங்களில் ஏதாவது ஒன்று குறைந்தது 10 பக்கங்கள் படிக்கும் பழக்கம் நல்லது.

11 . கவலை ,கஷ்டங்கள், பிரச்சினைகள் அதிகமாக நினைக்காமல் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு மனதை அமைதியான முறையில் வாழ முனைவோம். 

12.கோபம், வெறுப்பு ,டென்சன் போன்ற உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் எண்ணங்களை தவிர்க்க வேண்டும் .

13 . நாம் இந்த பூமிக்கு சுற்றுலா வந்து இருக்கிறோம் . சந்தோஷமாக ,ஆரோக்கியமாக , ஆயுளுடன் வாழ்ந்து பிறவியின் நோக்கம் அடைவோம்.

14 .சூரியனைபோன்று 500கோடி ஆண்டுகள் வாழ போவதில்லை. 
கொண்டு வந்தது ஒன்றும் இல்லை.
கொண்டு போவதும் ஒன்றும் இல்லை .

15. உண்மையான சொத்து உடல் ஆரோக்கியம், மன அமைதி என்பதை உணர்ந்து வாழ முனைவோம்.

தேங்காய் மற்றும் வாழைப்பழம்

தேங்காய் மற்றும் வாழைப்பழம் இரண்டும் இயற்கையின் உன்னதமான படைப்புகளாக கருதப்படுகிறது. கலப்படம் இல்லாத இயற்கை சார்ந்த பொருட்களாக இது இன்றும் மதிக்கப்படுகிறது. பெரும்பாலான இயற்கை பொருட்கள் விதைகளை உடையதாக இருக்கிறது, அவை மீண்டும் ஒரு செடியை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஆனால் தேங்காயும், வாழைப்பழமும் அப்படியல்ல. இது மட்டுமின்றி வேறு சில ஆன்மீக காரணங்களும் இதற்கு உள்ளது.

தேங்காயின் சாராம்சம் :
🍌 தேங்காயின் பயன்களை நாம் அனைவரும் அறிந்ததே. தேங்காயை சாப்பிட விரும்பினால் அதனை உடைத்துதான் ஆக வேண்டும். அதை சாப்பிட்ட பிறகு அதன் வெளிப்புறத்தை தூக்கி எறிந்து விடுவோம். அதை வைத்து மற்றொரு மரத்தை உருவாக்க இயலாது. மரத்தை உருவாக்க விரும்பினால் ஒரு முழுத்தேங்காயால் மட்டுமே முடியும்.

வாழைப்பழத்தின் சாராம்சம் :
🍌 வாழைப்பழத்தை சாப்பிடும்போது பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை வீசிவிடுவோம். வாழை மரத்திற்கு தேவையான பொருட்களை கொடுக்கும்போது அது மற்றொரு மரத்தை தானாக உருவாக்குகிறது.

நற்குணங்கள் :
🍌 வாழைப்பழம் கடவுளுக்கு படைக்கப்படுவதன் அர்த்தம் என்னவெனில் எப்படி இனிமையான பழத்தை சுவையே இல்லாத தோலானது மூடியிருக்கிறதோ அதேபோல நமக்கு நன்மைகளை வழங்கக்கூடிய நம்முள் இருக்கும் பல நல்ல குணங்களை தேவையே இல்லாத சில தீய குணங்கள் மூடியிருக்கின்றன. அவற்றை துறந்தால் மட்டுமே நம்மால் வாழ்வில் இனிமையை உணர முடியும்.

கர்வம் :
🍌 தேங்காயின் மேல் இருக்கும் வெளிப்புற ஓடுதான் நமக்குள் இருக்கும் கர்வமும், அகங்காரமும் ஆகும். எப்போது நாம் நம்மை சுற்றியிருக்கும் கர்வம் என்னும் ஓட்டை உடைக்கிறோமோ அப்போதுதான் நம் மனம் திறந்து அதற்குள் இருக்கும் மென்மையான தேங்காய் போன்ற இனிமையான குணம் வெளிப்படும்.

🍌 அதில் இருக்கும் இனிமையான தண்ணீர் நம் மனதில் இருக்கும் பக்தியை குறிக்கும். அதில் இருக்கும் மூன்று கண்களும் நம்முடைய கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தை குறிப்பதாகும்.

🍌 இதை நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்துவிட்டார்கள். அதனால்தான் தேங்காய் மற்றும் வாழைப்பழம் வைத்து இறைவனை வழிபடும் வழக்கம் இன்றும் நம் வழிபாட்டு முறையில் உள்ளது.

Monday, 25 May 2020

இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு


🐎குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீரருந்தவும்.  
*குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.*

🐈பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள்.
*அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.*

🐛புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள்.
*நச்சுக் கனிகளை புழு துளைக்காது.*

🐞பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
*விஷக் காளான்கள் மீது பூசிகள் உட்காராது.*

🐇முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். 
*மரம் செழிப்பாக வளரும்.*

🐍பாம்பு ஓய்வெடுக்கும் இடத்தில் உங்கள் வீட்டைக் கட்டுங்கள்.
பாம்புகள் *குளுமையான இடங்களில் மட்டுமே ஓய்வெடுக்கும்.*

🦩பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில்,
*உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.*

💫பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று 
அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள்..
*நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.*

🥥🍌அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள்..
*வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.*

🐟மீன்களை போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். 
*நீங்கள் பூமியில் நடக்கும் போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.*

☄️அடிக்கடி வானத்தைப் பாருங்கள். 
*உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.*

🙈🙉🙊நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள்..
உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். 
*உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.*

ஆட்டோமேட்டிக் கூலிங்கிளாஸ்கள் எப்படி நிறம் மாறுகிறது? ( Photo Chromatic Glasses)


கண் கண்ணாடிகளில், லென்ஸ் உள்ள கண்ணாடிகளில் கூட இந்த ஆட்டோமேட்டிக் கண்ணாடிகள் மிகவும் சாதாரணமாகி விட்டன.

போட்டோ க்ரோமாடிக் கிளாஸ்கள் என்ற பெயர் கொண்ட வெயிலில் நிறம் மாறும் கண்ணாடிகள் கண் கண்ணாடிகள் மட்டுமல்லாது சில கார்களின் 'சன் ரூஃப்' எனும் 'கூரைக் கண்ணாடிகளில்' கூட உபயோகப்படுத்தப்படுகிறது. இது நிறம் மாற ஒரு சில நிமிடங்களே எடுத்துக்கொண்டாலும் அந்த வேகம் போதாது என்பதாலும் கண்ணாடியின் கருமை அளவைத் தேவைக்கேற்ப கட்டுப்படுத்த இயலாது என்பதாலும் கார்களின் பக்கக் கண்ணாடிகளில் உபயோகத்திற்கு வரவில்லை.

*உருவாக்கியவர்:*

'கார்னிங் க்ளாஸ் ஒர்க்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டான்லி ஸ்டூக்கி என்பவர் அறுபதுகளில் உருவாக்கிய கண்ணாடி செய்முறை இது. இவருடைய இந்த கண்டுபிடிப்புக்காக அமெரிக்க தேசிய தொழில்நுட்ப மெடல் 1986ம் ஆண்டு வழங்கப்பட்டது.

*உருவாகும் விதம்:*

கண்ணாடிக் குழம்பில் 0.01 முதல் 0.1 சதவீதம் வரை சில்வர் க்ளோரைட் சேர்க்கப்படும். சிறு அளவு காப்பர் (I) க்ளோரைடும் சேர்க்கப்படும். இது மிகச் சிறிய சில்வர் க்ளோரைட் க்றிஸ்டல்களாக கண்ணாடிக்குள் அமையுமாறு குளிர்விக்கப்படுகின்றன.

இந்தக் க்றிஸ்டல்கள் மிகச் சிறியதாக இருப்பதால் பார்வைக்குத் தெரியாது. அதே சமயம் குறுகிய அலைநீளமுள்ள அல்ட்ரா வயலட் கதிர்களை ஈர்த்துக் கொள்ளும்.

*கருமையாகும் விதம்:*

Sun Glasses சில்வர் க்ளோரைட் க்றிஸ்டல்கள் பாஸிடிவ் சார்ஜ் கொண்ட சில்வர் அயான்களாலும் (Ag +) நெகடிவ் சார்ஜ் கொண்ட க்ளோரைட் அயான்களாலும் (Cl-) இணைந்தவை. புற ஊதாக் (Ultra Violet) கதிர்கள் இந்தக் க்றிஸ்டல்களைப் பிரித்து சார்ஜ் இல்லாத சில்வர் (Ag0) மற்றும் க்ளோரைட் (Cl0 ) அணுக்களாக மாற்றுகிறது.
(போட்டோக்ராபிக் தாள்களிலும் இதே தான் நடக்கிறது).

Cl- + UV light --> Cl0 + e-
Ag+ + e- --> Ag0

சார்ஜ் இல்லாத சில்வர் அணுக்களின் இணைந்த தோற்றம் கண்ணாடியின் ஒளி ஊடுருவலைத் தடுக்காத அளவில் இருந்து கொண்டு கண்ணாடியை சாம்பல் அல்லது ப்ரௌன் நிறமாக காட்டுகிறது.

லென்ஸ் கண்ணாடிகளில் மிகுந்த தூரப்பார்வை உடையவர்களுக்கு இந்த போட்டோக் கண்ணாடிகள் ஒத்து வராது. இவர்களுடைய கண்ணாடியில் லென்ஸ் நடுவில் தடிமனாக இருப்பதால் போட்டோ கண்ணாடி உபயோகித்தால் அங்கு மட்டும் மிகக் கருமையாகவும் ஒளி குறைவாக புகுமாறும் இருக்கும்.

*கருமை நீங்கும் விதம்:*

சூரிய ஒளி குறையும் போது தான் கண்ணாடியில் சிறிதளவு சேர்த்த காப்பர் (I) க்ளோரைடுக்கு வேலை. புற ஊதாக் கதிர்கள் குறையும் போது காப்பர் (I) அயான்கள் (Cu+) சார்ஜ் இல்லாத க்ளோரின் அணுக்களை க்ளோரைட் அயான்களாக மாற்றுகிறது.

அதே சமயம் அதுவும் காப்பர் (II) அயான்களாக (Cu ++) மாறுகிறது. இது பின்னர் சில்வர் அணுக்களை ஆக்ஸிடைஸ் செய்து சில்வர் அயான்களாக மாற்றிவிடுகிறது.

Cl0 + Cu+ --> Cl - + Cu++
Cu++ + Ag0 --> Ag+ + Cu+

பாஸிட்டிவ் சார்ஜ் கொண்ட சில்வர் அயான்கள் க்ளோரைட் அயான்களுடன் கூட்டுச் சேர்ந்து பழையபடி சில்வர் க்ளோரைட் க்றிஸ்டல்களாக மாறுகிறது. கண்ணாடியும் கருமை நீங்கி தெளிவாகிறது.

Saturday, 23 May 2020

Money-Making Online Business Ideas

The best thing about the coming of the broadband web is the capacity to begin a business while never going out. Truth be told, for each thought recorded underneath you can work from anyplace on the off chance that you have a PC and web. You don't require that much cash to begin - simply time and perseverance. 

Here are eight incredible approaches to bring in cash with an online business. 

1. Course Creation – You don't need to be an ensured educator to encourage others what you know. You can essentially build up a "how-to" bit by bit course utilizing a stage like Teachable.com to convey the course. You can discover instant PLR courses, that you can guarantee as to your own, and exchange under your business image. Numerous effective advertisers and online organizations are utilizing this system. 

2. Partner Marketing – An associate sells others' items (either physical, computerized, or both) and gets a commission installment. You can do this through a specialty blog or site and focused on the email list. If you develop a large enough rundown, various six figures are conceivable as you become the go-to hotspot for your specialty. 

3. Private Label Rights Content Creator – Other individuals who work online as bloggers regularly need more time to make all their own substance. That is the place you come in. On the off chance that you can either compose or enlist somebody to compose for you, you can make excellent PLR substances, for example, articles, blog entries, eBooks, and more to offer to others to utilize. 

4. Virtual Assistance – Every business needs a right hand or secretary. In case you're acceptable at client assistance, sorting out, utilizing certain product programs, and other regulatory assignments, at that point you can do them from home online for your customers. You'll utilize the innovation accessible to play out the errands your customers need. 

5. Life, Health, or Business Coach – The training business is rewarding. Numerous mentors make different six figures because of the capacity to bunch mentor, utilizing innovation like JigsawBox.com to convey training on a one-to-numerous premise. In case you're educated and like working legitimately with others, instructing may be an incredible profession for you. 

6. Visual Designer – If you feel comfortable around visual communication programming, at that point you're in karma since you can maintain a generally excellent business web-based planning site, promoting illustrations, book spreads, headers, and more from the solace of your home office. 

7. Professional writer – Many keen individuals have smart thoughts yet not sufficient opportunity to actualize them all. In case you're acceptable at composing, this is an extraordinary chance to utilize your art to help other people recount to their accounts and get paid. You can discover customers by means of Hire Writers, just as by systems administration in writer gatherings, blogging gatherings, and other composing bunches on Facebook. 

8. Online Business Manager – All organizations should be overseen. In case you're acceptable with the venture the executives and comprehend what is engaged with business the executives, and are acceptable at setting up frameworks and procedures, at that point online business the board may be for you. It's very little not quite the same as dealing with a business; you'll simply need to make sense of the innovation expected to support your customers. 

There are truly several different ways to bring in cash on the web. These are only a couple of thoughts. You can likewise begin a retail location web-based utilizing Amazon's Fulfillment Service, or you can begin a specialty YouTube channel and acquire promotion income. Whatever you choose to do to bring in cash online article Submission, it just takes venture and persistence to get it going - simply like some other sort of business.

Featured post

Sunday

  1.         Plan ahead: Use your Sunday to plan out your schedule for the week ahead. Make a to-do list, schedule appointments and meetings...