Saturday, 24 April 2021

தியானம் செய்யும் முறை



தியானத்தை துவங்க உடல் தூய்மை, கை, கால், முகம் அலம்பி தியானத்தை துவங்க வேண்டும் 

வயிறு காலியாக இருக்க வேண்டும்
உகந்த நேரம் சந்தியா வேளை – காலை, மாலை
உகந்த இடம்காற்றோட்டமான அமைதியான சூழல்
ஆசனம்சுகாசனம் அல்லது, அர்த்த பத்மாசனம், சித்தாசனம் அல்லது வஜ்ராசனம் , பத்மாசனம்

முத்திரைசேஷ்டா முத்திரை அல்லது சின் முத்திரை

யோகம் சகஜ யோகம் – தசைகளை தளர்த்தி நாம் விரும்பியபடி அமர்தல்

உடல் நிலைதலை, கழுத்து, முதுகு மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்க
வேண்டும். 

முதுகு நிமிர்ந்து உட்கார வேண்டும்.

திசைதெற்கு திசை நோக்கி அமர வேண்டும்

வாய்அங் என்று சொல்லி நாக்கால் அன்னத்தைத் தொட்டு உதடுகளை லேசாக மூடுங்கள்
கண்கள்கண்களை புருவ மத்தியை நோக்கி இயல்பாகக் குவியுங்கள்

(புருவ மத்தியில் ஆன்மா உள்ளது. தியானத்தின் பக்குவ நிலையில் ஆன்ம ஒளி ஜோதியாகத் தெரியும்.)

மனநிலை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்த்துங்கள்

எண்ணக் குவிப்பு ஞான தீபம் நம் புருவ மத்தியில் இருப்பதாக பாவித்து வேறு
நினைப்பின்றி மனதால் அதைத் துதியுங்கள்

எண்ணங்கள் பின் செல்ல வேண்டாம்

நம் எண்ணங்கள் அங்கும் இங்கும் ஓடும்.

கவலை வேண்டாம். கஷ்டப்பட்டு எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டாம்.

மனம் அலைந்தால் நீண்ட ஒரு பெருமூச்சு விட்டு,

பிறகு தியானத்தை தொடருங்கள்.

எண்ணங்கள் தானே திரும்பி வரும். 

மூச்சுமூச்சு இயல்பாக விடுங்கள்

தியான காலம்ஆரம்பத்தில்

தியான நேரத்தை 5 நிமிடங்கள்,

பின் 10 நிமிடங்கள்,

பின் 15, நிமிடங்கள்,

பின் 30 நிமிடங்கள்

எனப்படிப்படியாகக் கூட்டுங்கள். 

ஒருமாத காலம் இத்தியானத்தை தொடர்ந்து செய்தால்

ஒரு இனம் தெரியாத மன மகிழ்ச்சி,

மனநிறைவு, மன நிம்மதி, அபரிமிதமான மன ஆற்றல்

எல்லாவற்றையும் விட ஒரு புது மனிதராக நாம் மாறியிருப்பதை உணர்வீர்கள். 

வாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு. 

வாழ்க்கையில் நமது ஒவ்வொரு செயலும்,

தியானத்தின் பின் அர்த்தம் உள்ளதாக, ஆனந்தம் தருவதாகத் தெரியும்.

“கண்களிக்கப் புகை சிறிதும் காட்டாதே புருவக்கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே” - என்கிறார் வள்ளலார்

ஆகையால் தியானம் செய்யுங்கள் .

No comments:

Post a Comment

Featured post

Sunday

  1.         Plan ahead: Use your Sunday to plan out your schedule for the week ahead. Make a to-do list, schedule appointments and meetings...