*மூலச்சூடு குணமாக:*
அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து கஷாயமாக்கி பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து வர மூலச்சூடு, மூலக்கடுப்பு குணமாகும்.
*மூலத்தில் காணும் முளைகள் மறைய:*
ஒரு கைப்பிடி முருங்கை இலையையும், பழுப்பான எருக்கன் இலை நான்கையும் சம அளவு எடுத்து அம்மியில் வைத்து அரைத்து இரவில் உறங்கும் முன்னர் ஆசன வாயில் பற்று போட்டு வந்தால் மூலத்தில் காணும் முளைகள் வற்றி மறைந்து விடும்.
ஒரு டம்ளர் மோருடன் ஒரு டம்ளர் முள்ளங்கி சாறு கலந்து 25 நாட்கள் தொடர்ந்து அருந்திவர மூலநோய் அகலும்.
ஆமணக்கு இலைகளை நல்லெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக இருக்கும் போது ஆசனவாயில் தழைகள் படும்படி இறுக்கமாக கட்டவும்.இவ்வாறு செய்து வந்தால் மூல நோய் அகலும்.
15 துளசி இலை, 2 மிளகு, 2 சிறு வெங்காயம்
ஆகியவற்றை அரைத்து சுடு நீரில் நெல்லிக்காய் அளவு கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் மூல நோய் குணமாகும்.
முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், சுடினால் ஏற்படும் கட்டி, இரத்த மூலம் போன்றவை எளிதில் சரியாகும்.
பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு போன்றவை தீரும்.
வெங்காயத்தாள், பொடுதலை, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம், பௌத்திரக் கட்டி போன்றவை குணமாகும். முடக்கத்தான் கீரையுடன் 2 கடுக்காயைத் தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மூல நோய்கள் குணமாகும்.
அகத்திக்கீரையை சாறாக எடுத்து சாற்றில் 5 கடுக்காய்களை உடைத்துப்போட்டு கஷாயம் தயாரித்து, அதை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சுமார் அரை மணி நேரம் ஆசனக் குளியல் செய்தால், மூலக்கிருமிகள், மூல எரிச்சல், மூலச்சூடு, இரத்த மூலம் போன்றவை முழுமையாக குணமாகும்.
கானாம்வாழைக் கீரையையும் துத்தி இலையையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் எளிதில் குணமாகும். துத்திக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டினால், மூல நோயில் உண்டாகும் பௌத்திரக் கட்டி குணமாகும்.
புளியாரைக் கீரைச் சாறில் துத்தி இலையை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் சரியாகும். சுக்காங் கீரைச் சாறில் கடுக்காய் தோலை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் மூல நோய்கள், குடற்புண்கள் குணமாகும்.
சுக்காங் கீரை, துத்திக் கீரை இரண்டையும் சம அளவு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால் இரத்த மூலம் உடனே தீரும். பண்ணைக் கீரைச் சாறில் நாவல் பருப்பை அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் உடனே குணமாகும்.
பாற்சொரிக் கீரைச், துத்திக்கீரை இரண்டையும் அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால் மூல நோய்கள் குணமாகும். பாற்சொரிக் கீரைச் சாறில் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் குணமாகும்.
பத்து துத்தி இலைகள் ஐந்து சின்ன வெங்காயம் சேர்த்து வாயில் இட்டு வெற்றிலை பாக்கு மெல்வது போல மென்று தின்று விழுங்கி வர மூல நோய் குணமாகும்.
அகத்திக் கீரை சாற்றில் ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் வைத்து ஆசனவாயில் தடவினால் எரிச்சல் குணமாகும்.
அம்மான் பச்சரிசிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மலக்கட்டு உடையும்.
அரைக்கீரையுடன் பாசிப்பயிறு, மிளகு, நெய் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
ஆகாயத் தாமரை இலையை அரைத்து கட்டினால் வெளிமூலம், மூலக்கட்டி போன்றவை குணமாகும்.
ஆடையொட்டி இலை, வில்வ இலை இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் குடல் புண் மற்றும் மூலப்புண் குணமாகும்.
ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மலக்கட்டு தீரும்.
அரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய் 50 கிராம் சேர்த்து காய்ச்சி வைத்து கொள்ளவும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் குணமடையும்.
மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் விளக்கெண்ணெய்யை தினமும் ஆசன வாயில் தடவினால் தீர்வு காணலாம்.
ஆலம் பழத்தை உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஆவாரம் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
இஞ்சி சாற்றில் கடுக்காய் பொடியை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் விடுதலை பெறலாம்.
இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் தீரும்.
இலந்தை இலையை அரைத்து புளித்த மோரில் நெல்லிக்காய் அளவு கலந்து குடித்தால் மூலக்கடுப்பு குணமாகும்.
No comments:
Post a Comment