* வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய், கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிட்டு வர தேவையில்லாத கொழுப்பு கரைந்து, உடல் எடை குறையும்.
* பெருஞ்சீரகத்தை பொடித்து அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து தினமும் இரு வேளை சாப்பிட உடல் எடை குறையும்.
* எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து ஒரு டம்ப்ளர் நீருடன் கலந்து குடித்தால் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி இரத்தத்தை சுத்திகரித்து கொழுப்பை
குறைத்து உடலின் எடையை குறைக்கிறது.
* ஒரு ஸ்பூன் இஞ்சி சாறுடன் அதே அளவு
தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீருடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் செரிமானத்தை தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பை கரைத்து,
உடல் எடையை குறைக்கிறது.
No comments:
Post a Comment