Friday, 8 May 2020

வியர்குரு


வியர்க்குரு உள்ள இடத்தில், வெள்ளரிக்காயை அரைத்து தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், வியர்க்குரு பிரச்சனை நீங்கி, சருமம் குளிர்ச்சி பெரும்.

சருமத்தில் கற்றாழை ஜெல்லை தடவி மசாஜ் செய்து வந்தால் வியர்க்குரு பிரச்சனை தீரும்.
சீரகப் பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலந்து, வியர்குரு உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் வியர்க்குரு நீங்கும்.

வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவுங்கள். அல்லது வேப்பிலை போட்ட தண்ணீரை கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரால் முகம் மற்றும் உடலை கழுவி வந்தால் வியர்குருவால் ஏற்படும் அரிப்பை கட்டுப்படுத்தும்


சந்தனப்பொடியை ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கோடைக்காலத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும் வியர்குருவை போக்கலாம்.


சோளமாவை நீர் சேர்த்து கலந்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி 30 நிமிடம் கழித்து, குளிர்ச்சியான நீரால் கழுவினால், வியர்க்குரு உதிர்ந்துவிடும்.


பனிக்கட்டியைக் கொண்டு ஒற்றடம் கொடுத்தால், வியர்க்குரு தொல்லையிலிருந்து விடுபடலாம்.
வியர்க்குரு உள்ள இடத்தில், சாமந்திப் பூவின் சாற்றை தடவினால் குணமடையும்.


வெள்ளரி, கிருணிப்பழம் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் கோடையில் ஏற்படும் வியர்க்குரு, “அக்கி அம்மை” போன்ற நோய்கள் வராது.


சாதம் வடித்த கஞ்சியை வியர்க்குரு மீது தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வியர்க்குரு குணமாகும்.


தினமும் குளிக்கும் போது கடலை மாவை தேய்த்து குளித்து வந்தால், அதிகம் வியர்ப்பது குறைந்து, வியர்க்குரு வருவது தடுக்கப்படும்.
வியர்க்குரு மீது வெங்காயச் சாற்றை தடவினால் வியர்க்குரு மறைவதுடன் உடல் குளிர்ச்சி பெறும்.


பாசிப்பருப்பு மாவைக் கொண்டு தேய்த்து குளித்து வர வியர்குரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதற்கு பாசிப்பருப்பு மாவு, உளுத்தம் பருப்பு மாவு, கடலைப்பருப்பு மாவு ஆகியவற்றை ஒன்றாக சரிவிகிதத்தில் கலந்து, தினமும் அவற்றைக் கொண்டு தேய்த்து குளிக்க வேண்டும்.


பப்பாளிச் சாற்றை முகத்தில் பூசினால் வியர்க்குரு மறைந்து முகம் பளபளக்கும்.


பருப்புக் கீரையை அரைத்து சாறெடுத்து, வியர்க்குரு உள்ள இடங்களில் தடவிவர வியர்க்குருக்கள் பட்டுப் போய்விடும்.

No comments:

Post a Comment

Featured post

Sunday

  1.         Plan ahead: Use your Sunday to plan out your schedule for the week ahead. Make a to-do list, schedule appointments and meetings...