Friday, 8 May 2020

இயற்கை

 *ஏன் காலையில் எழுந்ததும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிக்க சொல்றாங்க தெரியுமா?*


உலர் திராட்சை மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான உலர் பழங்களுள் ஒன்று. இதில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கனிமச்சத்துக்கள் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால், மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் நோயாளிகளுக்கு இதை உட்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். உலர் திராட்சையை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதை நீரில் ஊற வைத்து உண்பதால் அதன் முழு நன்மைகளையும் பெறலாம்.



உலர் திராட்சையை நீரில் ஊற வைக்கும் போது, திராட்சை மற்றும் அதன் தோலில் உள்ள அனைத்து கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களும் நீரில் கரைந்துவிடும். அப்படி என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
 படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


உலர் திராட்சை நீரைத் தயாரிப்பது எப்படி?

150 கிராம் உலர் திராட்சை மற்றும் 2 கப் நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் நீரை ஊற்றி சூடானதும் இறக்கி, அதில் உலர் திராட்சையை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில், அந்நீரை வடிகட்டி, மிதமாக சூடேற்றி, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். முக்கியமாக இந்த நீரைக் குடித்த 30 நிமிடத்திற்கு வேறு எதையும் சாப்பிடக்கூடாது. இப்படி தினமும் குடித்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை உடலில் காணலாம்.
இப்போது உலர் திராட்சை நீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.



கல்லீரல் சுத்தம்

உலர் திராட்சை நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் அனைத்தையும் வெளியேற்றிவிடும். மேலும் இந்த நீர் கல்லீரலில் பயோகெமிக்கல் செயல்முறையை மேம்படுத்தும் மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்யவும் உதவும். மொத்தத்தில் இந்த நீரை கல்லீரலை எளிதில் சுத்தம் செய்யக்கூடியது.



அசிடிட்டி

நீங்கள் அசிடிட்டி பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுபவராக இருந்தால் உலர் திராட்சை தண்ணீர் நல்ல நிவாரணத்தை அளிக்கும். காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை நீரை ஒருவர் குடிக்கும் போது, அது வயிற்றில் அமிலச் சுரப்பை சமநிலையில் பராமரிக்கும்.



நோயெதிர்ப்பு சக்தி

உலர் திராட்சை நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக நிறைந்திருக்கும். இந்த நீரை அன்றாடம் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். கொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் வலுவான நோயெதிர்ப்பு சக்தி அவசியம் என்பதால், இந்நீரை தினமும் குடிப்பது மிகவும் நல்லது.


இதய ஆரோக்கியம்

உலர் திராட்சை நீர் இரத்தத்தை சுத்தம் செய்யும் சுத்திகரிப்பானாக செயல்படுவதோடு, இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவும். மேலும் இது உடலில் இருந்து கெட்ட கொலஸ்ட்ராலை நீக்குவதால், இதயத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அபாயம் குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும்.


புற்றுநோய்

உலர் திராட்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புற்றுநோயை உண்டாக்கும் ப்ரீ-ராடிக்கல்களிடம் இருந்து உடலுக்கு பாதுகாப்பு அளிக்கும். தற்போது புற்றுநோயின் தாக்கத்திற்கு பலர் ஆளாகிறார்கள். இதற்கு நாம் உண்ணும் பல உணவுகளும் முக்கிய காரணமாக உள்ளன. ஆகவே புற்றுநோய் வராமல் இருக்க நினைத்தால், உலர் திராட்சை நீரை தினமும் காலையில் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.


ஆரோக்கியமான செரிமான மண்டலம்

உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் சிறப்பான உணவுப் பொருள். உலர் திராட்சை நீரை குடிப்பதால், செரிமானம் மேம்படும். அதோடு மலச்சிக்கல், அஜீரண கோளாறு போன்ற செரிமான பிரச்சனைகள் வராமலும் தடுக்கும். இந்த நீரை தினமும் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால், அது குடலியக்கத்தை மேம்படுத்த உதவி புரியும்.


எடை குறைவு

உலர் திராட்சை நீரை தினமும் காலையில் குடித்தால், அது உடல் எடை குறைய உதவும். உலர் திராட்சையில் புருக்டோஸ் மற்றும் க்ளுக்கோஸ் போன்றவை அதிகம் உள்ளதால், இது உடலில் நீண்ட நேரம் ஆற்றல் நிலைத்திருக்கச் செய்யும். அதோடு இதில் உள்ள நார்ச்சத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும்.


இரத்த அழுத்தம்

உலர் திராட்சை நீரில் பொட்டாயம் சத்தும் இருக்கும். இது உடலில் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவி புரியும். உங்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை இருப்பின், தினமும் உலர் திராட்சை நீரைக் குடியுங்கள்.


இரும்புச்சத்து குறைபாடு

உலர் திராட்சை தண்ணீர் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே உலர் திராட்சை மற்றும் அதன் நீரை உட்கொள்வதன் மூலம், இரத்தத்தின் அளவு அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். முக்கியமாக இது இரத்த சோகையைத் தடுக்கும்.


எலும்பு உருவாக்கம்

உலர் திராட்சையில் போரான் உள்ளது. இது எலும்பு உருவாக்கத்திற்கு உதவும் சத்தாகும். மேலும் உலர் திராட்சையில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் சத்தும் உள்ளது. ஆகவே அன்றாடம் வெறும் வயிற்றில் உலர் திராட்சை நீரைக் குடித்தால், எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.🔊 *இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நிகழும் தெரியுமா?*


தேன் மருத்துவ குணம் நிறைந்த பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தேன் சளியை எதிர்த்துப் போராடவும், சருமத்திற்கு ஈரப்பதமூட்டவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தேனைப் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. தேனை ஒருசில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால், அது மிகவும் சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் வாரி வழங்கும்.



ஆனால் அந்த தேனை ஒருவர் தினமும் இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், நம் உடலினுள் பல்வேறு அற்புதங்கள் நிகழும் என்பது தெரியுமா? அந்த அற்புதங்கள் என்னவென்று தெரிந்தால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தமிழ் போல்ட்ஸ்கை இரவு தூங்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


நல்ல தூக்கம்

தேனில் ட்ரிப்டோஃபேன் என்ற ஹார்மோன் உள்ளது. இது உடலை ரிலாக்ஸ் அடைய உதவுகிறது மற்றும் உடலுக்கு 'இது படுக்கைக்கு செல்ல வேண்டிய நேரம்' என்ற சிக்னலை அளிக்கிறது. நம் உடலுக்கு இந்த அமினோ அமிலம் தேவைப்பட்டாலும், அது இயற்கையாகவே உற்பத்தி செய்வதில்லை. மேலும் தேன் போன்ற குறிப்பிட்ட உணவுகளை உண்பதன் மூலமே பெற முடியும். சில சமயங்களில் நாம் நள்ளிரவில் எழுந்திருப்போம். இது ஏன் நடக்கிறது என்று தெரியுமா? ஏனென்றால் நம் தூக்கத்தின் போது, மூளைக்கு க்ளைகோஜன் என்னும் பொருள் தேவைப்படுகிறது மற்றும் சிறுநீரகங்களில் அமைந்துள்ள அட்ரீனல் சுரப்பிகளை அட்ரினலின் மற்றும் கார்டிசோலை வெளியேற்றத் தூண்டுகிறது. இதுவே உங்கள் தூக்கத்தைக் கெடுக்கிறது. அதிர்ஷ்டவசமாக, தேனில் க்ளைகோஜன் உள்ளது. எனவே தூங்குவதற்கு முன் இதை உட்கொள்ளும் போது, அட்ரினலின் அவசரமாக வெளியேற்றுவது தடுக்கப்பட்டு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.



இரத்த அழுத்தம் குறையும்

உயர் இரத்த அழுத்தம் இதய நோய்களின் அபாயத்திற்கு முக்கிய காரணியாக இருப்பதால், இதை சரியான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியம். இதனால் இதய நோய்களின் தீவிரத்தைத் தவிர்க்கலாம். தேனில் உள்ள ஆன்டி-ஆகஸிடன்ட்டுகள், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக காட்டப்பட்டுள்ளன. ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவது இப்பிரச்சனையைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழியாகும்.



ட்ரைகிளிசரைடுகள் குறையும்

ட்ரைகிளிசரைடுகள் என்பது இரத்தத்தில் உள்ள ஒரு வகையான கொழுப்பு. ஒருவரது உடலில் ட்ரைகிளிசரைடுகுள் அதிக அளவில் இருந்தால், அது சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். அதிர்ஷ்டவசமாக, தேன் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைப்பதுடன் தொடர்பு கொண்டுள்ளது. இத்தகைய தேனை ஒருவர் இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைப் பிரித்து வெளியேற்றிவிடும்.



நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளது. இது உடலைத் தாக்கும் நுண்கிருமிகளான பாக்டீரியா, பூஞ்சி மற்றும் பல வைரஸ்களை எதிர்த்துப் போராடும் அளவில் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவும். தினமும் இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், உடலுக்கு கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறன் அதிகரித்து, உடல் வலிமையாக இருக்கும்.



வயிற்றுக் கொழுப்பைக் கரைக்கும்

தினமும் இரவு தேனை உட்கொள்வதால், உடல் ஒரு தெர்மோஜெனிக் விளைவை உருவாக்குவதன் மூலம் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது. இது உடல் வெப்பநிலையை சிறிது அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, எவ்வித கஷ்டமுமின்றி உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.



இருமலை போக்குகிறது

தேனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இயற்கையாகவே உள்ளது. ஒரு டம்ளர் வெதுவெப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தினமும் இரவு குடித்து வந்தால், அது தொண்டையில் உள்ள கரகரப்பை குறைப்பதோடு, இருமலை போக்குகிறது. கூடுதலாக, தேன் மிகச்சிறந்த ஆன்டி-பயாடிக் பொருள். இது தொண்டையில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து, தொண்டையில் உள்ள தொற்றுக்களைப் போக்கும்.



முதுமையைத் தடுக்கும்

முதுமையைத் தடுக்க சிறந்த வழி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை உட்கொள்வது. இத்தகைய ஆன்டி-ஆக்ஸிடன்ட் தேனில் நிறைந்துள்ளது. முதுமையைத் தடுக்க சருமத்திற்கு ஈரப்பதமூட்டுவதும், சத்தான சீரம் பயன்படுத்துவதும் சிறந்த யோசனை தான். ஆனால் இரவு தூங்கும் முன் தேன் சாப்பிடுவது முதுமை தோற்றத்திற்கான அறிகுறிகளை எதிர்த்துப் போராட பெரிதும் உதவி புரியும்.



மன இறுக்கத்தைப் போக்கும்

தேனில் பாலிஃபீனால் என்னும் மன இறுக்கத்தை எதிர்த்துப் போராடும் ஆர்கானிக் கெமிக்கல் உள்ளது. நீங்கள் எந்நேரமும் ஒருவித மன அழுத்தத்துடன் இருப்பது போன்று உணர்ந்தால், தினமும் இரவு தூங்கும் முன் தேனை சாப்பிடுங்கள். இதனால் மறுநாள் காலை மன அழுத்தம் நீங்கி, புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்வீர்கள்.

No comments:

Post a Comment

Featured post

Sunday

  1.         Plan ahead: Use your Sunday to plan out your schedule for the week ahead. Make a to-do list, schedule appointments and meetings...